Touring Talkies
100% Cinema

Wednesday, June 25, 2025

Touring Talkies

அஜித் சாரின் படத்தை நான் இயக்க இன்னும் என்னை தயார்படுத்த வேண்டும்… ‘3BHK’ பட இயக்குனர் ஸ்ரீ கணேஷ் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் ஆக இருந்த ஸ்ரீ கணேஷ், 2017-ஆம் ஆண்டு ‘எட்டு தோட்டாக்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் அதர்வா நடித்த ‘குருதியாட்டம்’ என்ற படத்தை இயக்கினார்.

தற்போது அவர் இயக்கியுள்ள ‘3 பிஎச்கே’ திரைப்படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 4ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், ‘3 பிஎச்கே’ படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ஸ்ரீ கணேஷ் அஜித் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவல் குறித்து ‘3 பிஎச்கே’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கான பதிலில் அவர் அந்த செய்தி உண்மையல்ல என்றார். மேலும், அஜித் குமார் போன்ற ஒரு பெரிய நட்சத்திரத்துடன் பணியாற்ற வேண்டும் என்றால், நான் இன்னும் வளர வேண்டும். இன்னும் அந்தளவுக்கு வளரவில்லை என நினைக்கிறேன். பல தரமான படங்களை இயக்கிய பிறகு, அவரை சந்தித்து கதை கூறி, அவரது நடிப்பில் ஒரு படம் இயக்க விரும்புகிறேன் என ஸ்ரீ கணேஷ் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News