Touring Talkies
100% Cinema

Wednesday, July 30, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயன் சாருடன் நடிக்க மிகவும் ஆசை – நடிகை ஆர்ஷா சாந்தினி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சினிமாவில் பரிசுபெற்ற நடிகையான ஆர்ஷா சாந்தினி, தற்போது தர்ஷனுடன் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. இந்தப் படத்தை இயக்குநர் ராஜவேல் எழுதி இயக்கியுள்ளார். இதில் காளி வெங்கட், ஆர்ஷா சாந்தினி, பைஜூ, வினோதினி, தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

இப்படம் வெளியாக உள்ள நாள்கள் அருகில் வந்துள்ள நிலையில், படக்குழுவினர் படத்தின் விளம்பரப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், நடிகை ஆர்ஷா சாந்தினி, இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது, “தமிழ் சினிமாவில் எனது அறிமுகம் என்பது ஒரு கனவு போல இருந்தது. அந்தக் கனவு இன்று நிறைவேறி வருவதால் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்.

மேலும், “தற்போதைய தமிழ் நடிகர்களில், வருங்காலத்தில் சிவகார்த்திகேயன் சார் உடன் ஒரு படத்தில் நடிக்க ஆசை உள்ளது. அவருடைய நடிப்பு, நகைச்சுவை நேரம், மேலும் அவரது அணுகுமுறையும் எனக்கு மிகவும் பிடித்தமானவை,” என்றும் கூறினார். இந்த திரைப்படம் நம் வீட்டு மக்களின் இயல்பான வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இதில் நகைச்சுவி, உணர்ச்சி மற்றும் குடும்பம் சார்ந்த நல்லக் கதைகள் கலந்து இருக்கும் என்று தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News