கடந்த ஆண்டில் வெளியான ‘ஆயுஷ்மதி கீதா மெட்ரிக் பாஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் காஷிகா கபூர். இதில் அவர் ‘கீதா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட்டில் அறிமுகமான பிறகு தற்போது தெலுங்கு திரையுலகிலும் காஷிகா கபூர் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். அதன்படி, கடந்த மாதம் 4ஆம் தேதி தெலுங்கில் வெளியான ‘லவ் யுவர் பாதர்’ திரைப்படம் மூலம் இவர் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார். இதில் ‘ஸ்வீட்டி’ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார், மேலும் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன.
இவரது அடுத்த திரைப்படம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில், நடிகர் அல்லு அர்ஜுனுடன் நடிக்கவேண்டிய ஆர்வம் தனது உள்ளத்தில் இருப்பதாகக் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “அல்லு அர்ஜுன் சார் தனது ஒவ்வொரு படத்திற்கும் காட்டும் அர்ப்பணிப்பு உண்மையில் எனக்கு பெரும் ஊக்கமளிக்கிறது. அவர் எந்த கதாபாத்திரத்திலும் முழுமையாக நுழைந்து அற்புதமாக செரிந்துபோவது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒருநாள் அவருடன் நடிக்கவேண்டும் என்பதே எனது கனவு” என்றார்.