தமிழில் இறுதி சுற்று’, ‘சூரரை போற்று’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கி முன்னணி இயக்குநராக மாறியவர் சுதா கொங்கரா. தற்போது அவர், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்து வரும் ‘பராசக்தி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கிடையில், சென்னையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் சுதா கொங்கரா கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் நடிகை சமந்தாவுக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில், சமந்தா குறித்து சுதா கொங்கரா உரையாற்றினார். அவர் கூறியதாவது:
“சமந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் காண்பிக்கும் தைரியமும், சவால்களை எதிர்த்து போராடும் மனப்பான்மையும் எனக்கு பெரும் ஊக்கமாக உள்ளது. அவருடன் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. அது விரைவில் நிச்சயமாக நடக்கும்,” என்று தெரிவித்தார்.