அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியானவுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுது. இந்த வெற்றிக்குப் பிறகு, அஜித்தின் அடுத்த படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 1997ஆம் ஆண்டு வெளிவந்த நேசம், உல்லாசம் படங்களில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை மகேஸ்வரி நடித்திருந்தார். அப்போது தனக்கு அஜித்தின் மீது பெரிய கிரஷ் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெகபதி பாபுவின் டாக் ஷோவில் கலந்து கொண்டு பேசிய மகேஸ்வரி, “அஜித் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்மீது பயங்கரமான கிரஷ் இருந்தது. கடைசி நாள் படப்பிடிப்பின் போது இனிமேல் அஜித்தைப் பார்க்க முடியாதே என்று மிகவும் கவலையாக இருந்தேன். அப்போது அஜித் என்னிடம் வந்து, ‘மகி, நீ எனக்கு தங்கச்சி மாதிரி. உன் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் எதற்காக வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். நான் கண்டிப்பாக உனக்காக வருவேன்’ என்று கூறினார். தங்கச்சி என சொல்லி விட்டாரே என அவர் சொன்னதை கேட்டவுடன் என் மனசே உடைந்து போனது” என கலகலப்பாக கூறியுள்ளார்.