தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, பின்னர் முன்னணி நாயகியாக உயர்ந்து 90-களில் பல ஹிட் படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது குணச்சித்திர வேடங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

சமீபத்திய பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மீனா பேசுகையில், என் திருமணம் குறித்து சிலருக்கு இவ்வளவு ஆர்வம் ஏன் என எனக்கு புரியவில்லை. எப்போதும் என் இரண்டாவது திருமணத்தைப் பற்றித்தான் பேசுகிறார்கள். நான் என் மகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு மீண்டும் திருமணம் செய்ய எந்தத் திட்டமும் இல்லை.
எந்த ஹீரோ விவாகரத்து செய்தாலும் அதைக் கூட என் திருமணத்துடன் இணைத்து வதந்தி பரப்புகிறார்கள். அது முற்றிலும் உண்மையல்ல. இப்போது நான் நடிப்பிற்கே முன்னுரிமை அளிக்கிறேன் என்று கூறினார்.

