கடந்த வாரம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், ஒரு பேட்டியில் கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது,

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்திற்கு பிறகு ஒரு குறும்படம் போன்று சிறிய படத்தை இயக்கலாம் என முடிவு செய்தேன். அதன் கதை தயாராக உள்ளது. அந்தப்படத்தை உருவாக்கி, திரைப்பட விழாக்களில் காண்பித்து, ஒரு வருடம் கழித்து திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளேன். அந்தப் படத்தின் வசூல் நிலை குறித்து எண்ணிக்கொள்ளாமல், குறைந்த பட்ஜெட் மற்றும் புதுமுக நடிகர்களை கொண்டு உருவாக்க திட்டமிட்டுள்ளேன்.
அந்தக் கதையை பல்வேறு வடிவங்களில் எழுதிப் பதியவைத்துள்ளேன். அதையே அடுத்ததாக இயக்கலாம் என எண்ணியுள்ளேன். ஆனால் இதுவரை உறுதியாக எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று கூறினார் கார்த்திக் சுப்பராஜ்.