Touring Talkies
100% Cinema

Wednesday, August 6, 2025

Touring Talkies

நான் கேமிங் விளம்பரங்களில் மட்டுமே நடித்தேன்… தன்மீதான குற்றச்சாட்டுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கான விளம்பரங்களில் நடித்ததாக கூறி, நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், ரானா டகுபதி ஆகியோர் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தோர் உட்பட மொத்தமாக 29 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடைய விசாரணைக்காக பலருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த வகையில், நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் இன்று ஆகஸ்ட் 6ம் தேதி விசாரணைக்காக ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, ஐதராபாத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நடிகர் விஜய் தேவரகொண்டா ஆஜரானார்.

இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் விசாரணை முடிவடைந்துள்ளது. இந்த விசாரணையைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் சூதாட்ட செயலியும் கேமிங் செயலியும் ஒன்றல்ல இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. நான் கேமிங் செயலி விளம்பரத்தில் மட்டுமே நடித்துள்ளேன். நான் பெற்ற பணம், ஒப்பந்த விவரங்கள் மற்றும் தொடர்புடைய நடைமுறைகள் குறித்து முழுமையான விளக்கம் அளித்துள்ளேன்” என்றார். இதற்கு முன்னர், இதே வழக்கில் கடந்த ஜூலை 30ம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜ் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News