Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

என் அப்பாவை நான் அதிகமாக நேசிக்கிறேன்- கமல்ஹாசன் குறித்து ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘சலார்’ படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடித்த பிறகு, தற்போது தமிழ் திரைப்படங்களில் பல முக்கியமான படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இதில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்திலும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்திலும் அவர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது தந்தை கமல்ஹாசனுடன் எடுத்துக்கொண்ட ஒரு அழகான புகைப்படத்தை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதனுடன், “என் சிரிப்புக்கு காரணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எனக்கு ஒளியும், சக்தியும் அளிக்கின்ற என் அப்பாவை நான் அதிகமாக நேசிக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உருக்கமான பதிவுக்கும், அதனுடன் இணைத்து பகிர்ந்த புகைப்படத்திற்கும் தற்போது லட்சக்கணக்கான லைக்குகள் குவிந்து வருகின்றன.

- Advertisement -

Read more

Local News