கமல்ஹாசன் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படத்தில் “நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே”, விக்ரமின் ‘கந்தசாமி’ படத்தில் “என் பேரு மீனா குமாரி”, விஜய் நடித்த ‘போக்கிரி’ படத்தில் “என் செல்லப்பேரு ஆப்பிள்” போன்ற பாடல்களுக்கு கவர்ச்சியான நடனத்தால் ரசிகர்களை கவர்ந்தவர் முமைத்கான். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்த இவர், கடந்த சில ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.

இதற்கிடையில், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் முமைத்கான், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய சில அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் பேசுகையில், “சமீபத்தில் எனக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. அதற்குப் பிறகு சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்துவிட்டேன். கடந்த காலத்தில் நான் நான்கு பேருடன் டேட்டிங் செய்திருந்தேன். ஆனால் தற்போது அவர்கள் யாருடனும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவர்களையெல்லாம் விட்டு பிரிந்து விட்டேன். இப்போது நான் ஒருவராக வசதியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். எதிர்காலத்தில் எனது வாழ்க்கையில் திருமண வாய்ப்பு வந்தால், நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன்,” என கூறினார்.

