Wednesday, October 23, 2024

ஒவ்வொரு காட்சியையும் 100 முறைக்கு மேல் பார்த்திருப்பேன்…கங்குவா குறித்து பிரம்மிப்புடன் பகிர்ந்த பாடலாசிரியர் மதன் கார்க்கி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யா தற்போது மிகவும் பிசியாக உள்ளார். அவர் கடந்த 3 ஆண்டுகளாக உழைத்து வந்த ‘கங்குவா’ படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் புரொமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பாடலாசிரியரும் வசனகர்த்தாவுமான மதன் கார்க்கி, படத்தின் தரத்தைப் பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த தகவல் சூர்யா ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மதன் கார்க்கி தனது பதிவில், முழு படத்தையும் பார்த்துவிட்டேன். டப்பிங்கின்போது ஒவ்வொரு காட்சியையும் 100 முறைக்கு மேல் பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறை பார்த்தாலும், படத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆழமான கதை, நுணுக்கமான திரைக்கதை, பிரமாண்ட காட்சிகள் மற்றும் சிறப்பான இசை என ‘கங்குவா’ ஒரு சக்திவாய்ந்த படமாக உள்ளது. சூர்யாவின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. இப்படம் உருவாகி, வெற்றியடைய இயக்கிய சிவாவுக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். மதன் கார்க்கியின் இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

Read more

Local News