Touring Talkies
100% Cinema

Tuesday, May 20, 2025

Touring Talkies

எனக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் – பாலிவுட் நடிகை ஷில்பா ஷிரோத்கர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷிரோத்கர். 1992ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற இவர், “ஜெய் ஹிந், கஜ் கஜினி, சிந்து” போன்ற பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு, சல்மான் கானின் தலைமையில் நடக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், ஷில்பா ஷிரோத்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தமக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை பகிர்ந்துள்ளார். அவர் அதில், “வணக்கம் மக்களே! எனக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் மற்றும் முகமூடிகளை அணியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News