டோலிவுட் சினிமா பாலிவுட் சினிமா என பிசியாக வலம் வரும் நடிகை ஜான்வி கபூர் கடைசியாக பரம் சுந்தரி படத்தில் நடித்தார். அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் தற்போது சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி மற்றும் ஹோம்பவுண்ட் படங்களில் நடித்து வருகிறார். இதில் சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று மும்பையில் வெளியிடப்பட்டது. இப்படம் திருமணத்தை மையமாகக் கொண்டதால், ஊடகங்கள் ஜான்வியிடம் அவரது திருமணத் திட்டங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு அவர் பதிலளிக்கையில், தற்போது எனது கவனம் முழுவதும் படங்களில் தான் உள்ளது. திருமணத்துக்கான திட்டமிடுவதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது” என்றார். இதேவேளை, ஜான்வி கபூர், ராம் சரணுடன் இணைந்து பெத்தி படத்திலும் நடித்து வருகிறார். அந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.