பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடிப்பதால் ரசிகர்களிடையே இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த படத்தின் “மோனிகா…” என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் நடிகை பூஜா ஹெக்டே நடனமாடிய காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்த நடனம் தொடர்பாக பூஜா ஹெக்டே ஒரு பேட்டியில் பேசுகையில், குத்துப்பாட்டு என்றாலே எனக்கு ஒரு தனிப்பட்ட உற்சாகம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட பாடல்களில் துள்ளல் மற்றும் மயக்கும் நடனங்களை ஆடுவதில் எனக்கு அதிக விருப்பம் உள்ளது. இப்போது பாலிவுட் சினிமாவைப் போன்று தென்னிந்திய படங்களிலும் குத்துப்பாடல்கள் மிகவும் பிரபலமாகி விட்டன என தெரிவித்தார்.