பிரபல மலையாள நடிகையான மமிதா பைஜூ தற்போது விஜய்யின் ஜனநாயகன், பிரதீப் ரங்கநாதனுடன் டியூட், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம், சூர்யாவின் சூர்யா 46 படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் டாக்டர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். அதேசமயம் டாக்டர் கனவும் இருந்தது. ஆனால் 7 படங்களில் நடித்த பிறகு அந்த கனவை கைவிட்டு விட்டேன். முதலில் வீட்டில் வருத்தப்பட்டார்கள் பின்னர் என் நடிப்பு திறமையை கண்டு ஆதரவு கொடுத்தார்கள் என்றுள்ளார்.
