இந்தி தொலைக்காட்சித் துறையில் பிரபலமான முகங்களில் ஒருவராக விளங்கும் மதல்சா சர்மா, சமீபத்தில் காஸ்டிங் கவுஸ் தொடர்பாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

தெலுங்கு திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 2009 ஆம் ஆண்டு வெளியான ‘‘பிட்டிங் மாஸ்டர்’’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் ‘‘தம்பிக்கு இந்த ஊரு’’ (2010), ‘‘காதலுக்கு மரணமில்லை’’ (2011), மற்றும் ‘‘பத்தாயிரம் கோடி’’ (2013) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் மதல்சா சர்மா, தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தில் சில விரும்பத்தகாத அனுபவங்களைச் சந்தித்ததாக தெரிவித்துள்ளார். அவற்றை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது என்றும், இறுதியில் அந்தப் பாதையில் தொடர வேண்டாம் என்று தானே முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.


 
