Friday, January 24, 2025

எனக்கு விருது வேண்டாம்… சினிமாவில் அர்ப்பணிப்புடன் உழைப்பவர்களுக்கு கொடுங்கள்… கிச்சா சுதீப் உயர்ந்த உள்ளத்துடன் பதிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கர்நாடக அரசு 2019 ஆம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் “பயில்வான்” படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் சுதீப்புக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விருதை நிராகரிப்பதாக நடிகர் சுதீப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கருத்தில்,சிறந்த நடிகராக என்னை தேர்ந்தெடுத்ததற்காக விருது குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். இந்த அங்கீகாரம் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். இது எனது உழைப்புக்கான மதிப்பீடாகும். ஆனால், என் முடிவு சிலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். கடந்த சில ஆண்டுகளாக விருதுகளை பெறுவதை நான் நிறுத்திவிட்டேன். இதை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன்.

சினிமாவுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து அயராது உழைக்கும் பல கலைஞர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து இந்த விருதை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். விருது குழுவினர் மற்றும் மாநில அரசிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் முடிவை நீங்கள் மதிப்பீர்கள் என நம்புகிறேன். நான் எடுத்த முடிவில் பயணிக்க உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன், என அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News