கண்ணூரில் சமீபத்தில் நடைபெற்றதொரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சுரேஷ் கோபி, அமைச்சர் பதவி வேண்டாம் என நினைக்கிறேன். தேர்தல்களுக்கு முந்தைய நாள் வரை ஒரு அமைச்சராக வேண்டாம் என்றே பத்திரிகையாளர்களுடன் பேசும்போது தெரிவித்திருந்தேன். சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும். எனக்கு இப்போது வருமானம் வெகுவாகக் குறைந்துவிட்டது. நான் சம்பாதிக்கும் வருமானத்தில் குறைந்தபட்சம் சிலருக்காவது உதவிட வேண்டும் என எண்ணுகிறேன். கேரளத்திலிருந்து முதல்முறையாக மக்களால் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கட்சியைச் சேர்ந்த முதல் ஆள் நானாவேன். அதே சமயம் இந்த அமைச்சர் பதவிக்கு, கேரள பாஜகவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகியுள்ள சதானந்தன் மாஸ்டர் பொருத்தமானவர் என்றுள்ளார்.
