தமிழ் திரைப்படத்துறையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் ஆண்ட்ரியா. இவர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், மற்ற மதங்களின் கோவில்களுக்கும் சென்று பக்தியுடன் வழிபாடுகளில் ஈடுபடுபவர். திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்த நிகழ்வையும், அதைப் பற்றிய அனுபவத்தையும் ஏற்கனவே பகிர்ந்திருந்தார். தற்போது, பஞ்சாப் மாநிலத்திற்கு பயணம் செய்த அனுபவத்தையும், அங்குள்ள பொற்கோவிலில் தரிசனம் செய்ததைப் பற்றியும் பதிவிட்டுள்ளார்.”எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. இது ஒரு சிறிய பயணமாக இருந்தாலும், ஆச்சரியமூட்டும் ஒரு அனுபவமாக அமைந்தது.
பொற்கோவில் எனக்கு மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது. அமைதியான, அழகான ஒரு தெய்வீகத் தலம். அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களையும் அன்புடன் வரவேற்கும் சிறப்புமிக்க இடம். சுதந்திரத்தின்போது எல்லைகளில் இருந்த மக்கள் எதிர்கொண்ட கடினமான நிலையை ‘பார்ட்டிஷன் மியூஸியம்’ என் கண்களைத் திறந்தது. அந்த அனுபவம் என்னை வாகா எல்லைக்கு அழைத்துச் சென்றது. அங்கு உள்ள ‘பிஎஸ்எப் சந்திப்புகள்’ அரங்கம், அதனை விவரிக்க இயலாத தனித்துவமான இடம். அங்கே பல இந்தியர்கள் உற்சாகத்துடன் இருப்பதைப் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
மேலும், அங்கு உள்ள உணவுகளின் ருசி ரசிப்பதில் நான் முழுமையாக மயங்கி இருந்தேன் என்பதை ஒப்புக்கொள்ள வெட்கப்படவில்லை. லஸ்ஸி, அம்ரித்சர் குல்சா, சோலே மற்றும் எனக்கு மிகவும் பிடித்த ஜிலேபி ஆகியவற்றை பருகி மகிழ்ந்தேன். கடைசியாக, ஷாப்பிங்! பல்வேறு இடங்களில் கண்கவர் வண்ணமயமான புல்காரி துணிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றின் விலை கூட மிகவும் நியாயமாகவே இருந்தது.இந்த பயணத்திற்குப் பிறகு, சீக்கிய சமூகத்தின் மீது எனக்கு இருந்த மரியாதையும், அபிமானமும் இன்னும் அதிகரித்தது என்று நான் நிச்சயமாக சொல்லலாம்,” என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.