‘அம்புலி, மாயை, சதுரம் 2’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்திருப்பவர் சனம் ஷெட்டி. அவர், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அதிக பிரபலமடைந்தார்.


சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சனம் ஷெட்டி, திரைத்துறையின் சில நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனம் எழுப்பினார். அவர் கூறியதாவது, சமத்துவம் என்றால், பத்து பேருடன் உல்லாசமாக பழகுவது, தமடிப்பது அல்லது கஞ்சா பயன்படுத்துவது அல்ல. எங்கள்போன்ற நடிகைகளுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அதுவே உண்மையான சமத்துவம்.


“நடிகர் மற்றும் நடிகைக்கு வழங்கப்படும் சம்பளத்திலும், அவர்களை அணுகும் முறையிலும் பெரிய வேறுபாடு இருக்கிறது. நடிகர்களை எப்படி அணுகுகிறார்களோ, அதே போல் நடிகைகளையும் அணுகுகிறார்களா? என்று பார்த்தால், அது சமமாக இல்லை. எங்களை ஒரு படத்தில் நடிக்க அழைக்கிறார்களா, அல்லது வேறு காரணங்களுக்காக அழைக்கிறார்களா? என்பது மிகுந்த கேள்விக்குறியாக உள்ளது,” என்று அவர் திறம்படக் கூறினார்.