டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்த பிரியங்கா மோகன், தற்போது தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ள ஓஜி திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடந்தது.

அப்போது சமூக வலைதளங்களில், பிரியங்கா மோகனுக்கு நடிப்பு தெரியாது, நடனமாட முடியாது என மீம்ஸ்கள் வெளியாகிக் கொண்டிருப்பதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “என்னை பிடிக்காதவர்கள் காசு கொடுத்து இப்படியான மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இவை எனக்குக் கவலை தருவதில்லை. இதனால் நான் மனம் உடைந்து போவதுமில்லை. மாறாக, இன்னும் என்னை திடப்படுத்திக் கொள்கிறேன். யார் மீம்ஸ் போட்டாலும் எனக்கென்ன…” என்று பதிலளித்தார்.