Touring Talkies
100% Cinema

Friday, May 2, 2025

Touring Talkies

நான் எந்தவொரு விபரீத முடிவையும் எடுக்கவில்லை… நான் நலமாக உள்ளேன் – கயல் சீரியல் நடிகை அமுதா பதிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை அமுதா, வயது 28. இவர் பல பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது ‘கயல்’ என்ற சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் தனியாக இருந்த அமுதா, கழிவறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஒரு வகை திரவத்தை குடித்து தற்கொலை செய்ய முயன்றதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து, அவரை மீட்ட தோழி ஒருவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும், கணவருடன் ஏற்பட்ட மன உளைச்சலினால் அமுதா இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டது. இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில், தற்கொலை முயற்சி செய்ததாக பரவிய தகவலுக்கு பதிலளித்துள்ள அமுதா, தற்போது தன்னுடைய கிராமத்தில் இருப்பதாகவும், தற்கொலை செய்துவிட்டதாக பரவிய தகவல் ஒரு வதந்தி மட்டுமே என்றும், அதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தனது வேண்டுகோளை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News