Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

நான் இந்த காரணத்தால் தான் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவில்லை – நடிகை திவ்யா ஸ்ரீதர் ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் தற்போது ‘செவ்வந்தி’ தொடரில் நடித்து வருகிறார். அவரது கணவர் அர்னவ் திவ்யாவிற்கு துரோகம் செய்துவிட்டு அன்ஷிதா என்ற சக நடிகையுடன் பழகி வருகிறார் என திவ்யா புகார் செய்திருந்தார். இந்நிலையில், அர்னவ் அன்ஷிதாவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார், பின்னர் கடந்த வாரத்தில் வெளியேறினார். இதனையடுத்து, திவ்யா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என தகவல் வெளியானது.

இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் திவ்யா ஸ்ரீதர் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்தார். “சிலர் அர்னவ்வை எனது முன்னாள் கணவர் என்று சொல்கிறார்கள். அது உண்மையல்ல. எங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை. நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். சிங்கிள் மதரா எனது குழந்தைகளை வளர்க்கும் போது பல சிரமங்களை சந்திக்கிறேன். ‘செவ்வந்தி’ டீம் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

சிலர் என்னை பிக்பாஸ் வீட்டிற்கு போகிறேன் என சொல்கிறார்கள். எனது குழந்தைகளை பிரிந்து இருக்க முடியாது என்பதால் நான் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவில்லை. நீங்களும் எனக்கு உறுதுணையாக இருக்கிறீர்கள். உங்களுக்கு நன்றி. உங்களுக்கு என்னிடம் சொல்ல வேண்டிய ஒரு ஆலோசனை மட்டும் உள்ளது, யாரையும் நம்பாதீர்கள்” என அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News