தீபிகா படுகோனை பின்தொடர்வதை நிறுத்தியதாக எழுந்த விமர்சனங்களுக்கு இயக்குனர் பரா கான் பதிலளித்திருக்கிறார். முதலில், தாங்கள் ஒருவரையொருவர் பின்தொடர்ந்ததே இல்லை என்று பரா கான் கூறி இருக்கிறார். மேலும், தீபிகாவின் மகள் துவா பிறந்தபோது அவரைப் பார்த்த முதல் சிலரில் தானும் ஒருத்தி என்றும் கூறினார்.இருவரும் ஒரு சில படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். பரா கான் ”ஓம் சாந்தி ஓம்” மற்றும் ”ஹேப்பி நியூ இயர்” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் தீபிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் பிளாக்பஸ்டர் வெற்றிகளைப் பெற்றன. அதிலிருந்து அவர்களின் நட்பு தொடர்கிறது.


