இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் “கூலி” திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் எந்த ஒரு இசை ஆல்பம் தயாரித்தாலும் அதில் நடிப்பவர்களை நான் மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுப்பேன். லோகேஷ் கனகராஜ் ஒரு நல்ல நடிகர். நான் உண்மையாக நேரில் பார்த்துள்ளேன். அதனாலே அவரை என் ஆல்பத்தில் நடிக்கச் செய்தேன். தற்போது, அவர் என்னை தனது திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளார். ‘ரஜினி சார் படம் நீங்க நடிச்சா நல்லா இருக்கும்’ என அவர் கூறியபோது, அதை நான் எப்படி மறுக்க முடியும்

ரஜினி சாருடன் நடித்தது எனக்கு கிடைத்த ஒரு பெரிய ஆசீர்வாதமாகும். இது என் மனதிற்குள்ளே நீண்ட நாட்களாகவே இருந்த ஒரு விருப்பம். ரஜினி சார் என்னை மட்டும் அல்லாமல், உடன் பணியாற்றும் அனைவரையும் அன்புடன் அரவணைத்து நடத்துகிறார். அந்த அன்பும் பரிசும் எனக்கும் கிடைத்தது.
அவருடன் நான் மிக நெருக்கமாக பேசுவேன். என் அப்பா மற்றும் அவருக்கிடையிலான நெருங்கிய நட்பைப் பற்றியும் பல விஷயங்களை அவர் எனக்கு பகிர்ந்துள்ளார். அவை எனக்கு பெரும் ஆச்சரியமாகவும் அமைந்தன. ஆனால் அந்த விஷயங்களை நான் வெளியேப் பகிர மாட்டேன், ஏனென்றால் அவர் அவை அனைத்தையும் ‘நீ கமல் சார் மகள் தானே’ என்று என்மீது வைத்த நம்பிக்கையுடன் பகிர்ந்தார். அந்த நட்பு இனிமையானதும், உறுதியானதும். அந்த நட்பின் ரகசியம் அவர் பகிர்ந்த அந்த பொக்கிஷங்களில் உள்ளது,” என்று கூறினார் ஸ்ருதி.