சிம்பு அடுத்ததாக நடிக்க இருக்கும் STR 49 திரைப்படத்தை ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார் எனவும், இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படம் ஒரு சூப்பர் மாஸ் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய திரைக்கதை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. ‘வசூல் ராஜா MBBS’ போலவே இது ஒரு முழுமையான கமெர்ஷியல் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகும் என்றும் கதை முழுவதும் ஒரு கல்லூரி பின்னணியில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார். இந்தப் படத்தில் சந்தானம் நகைச்சுவை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஒரு நகைச்சுவை நடிகராக 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தானம் திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, சந்தானம் இதை உறுதிப்படுத்தியதாவது, “ஆமாம், நான் STR 49 படத்தில் நடிக்கிறேன். ஒரு நாள் சிம்பு என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘எனது அடுத்த படத்தில் நடிக்க விருப்பமா?’ என்று கேட்டார். அவருக்குத் ‘இல்லை’ என்று சொல்வது என்னால் இயலாது. என் ஆரம்பக்கட்டத்தில் சிம்பு எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். STR 49 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அதே நேரத்தில், மற்றொரு படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன். STR 49 படத்தில் பங்கேற்கும்போது அந்த படம் தாமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே தயாரிப்பாளரிடம் நான் மன்னிப்பு கேட்டுள்ளேன். STR 49 திரைப்படத்தில் நாங்கள் இருவரும் இணையும் காட்சி மிகவும் அதிரடியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.