‘அம்மணி’, ‘மகளிர் மட்டும்’, ‘சில்லுக் கருப்பட்டி’, ‘குரங்கு பொம்மை’, ‘யாத்திசை’, ‘மாவீரன்’, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் செம்மலர் அன்னம். ‘மயிலா’ படம் மூலமாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும் இயக்குனராகவே சினிமாவிற்கு வந்தேன். அதற்காகவே வீட்டில் பிடிவாதமாக விஸ்காம் படிக்க வேண்டும் என அடம்பிடித்து படித்து முடித்தேன். வாழ்நாளில் ஒரு முழு நீளப் படத்தையாவது இயக்கிவிட வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன். அந்தக் கனவை ‘மயிலா’ நிறைவேற்றியிருக்கிறாள் என்றுள்ளார்.


