Touring Talkies
100% Cinema

Friday, June 13, 2025

Touring Talkies

3BHK படத்தில் நடித்த பிறகு தான் சொந்த வீடு வாங்கினேன் – நடிகர் சித்தார்த் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஸ்ரீகணேஷ் தற்போது இயக்கியுள்ள படம் ‘3BHK’. இந்தப் படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, ராதிகா, சைத்ரா, யோகி பாபு, மீத்தா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அம்ரித் ராம்நாத் பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டெயின்லெஸ் மேற்கொண்டுள்ளனர். இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ளார். இந்த படம் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படம் குறித்து சித்தார்த் கூறியதாவது: “’8 தோட்டாக்கள்’ படத்தை பார்த்த பிறகு ஸ்ரீகணேஷ் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது. அவர் என்னிடம் ‘இரண்டு கதைகள் உள்ளன; அதில் ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று கூறியதிலிருந்தே ‘3BHK’ உருவானது. அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக ஒப்புக்கொண்டேன். குழந்தைகளின் கண்ணே முன்னே, ‘நமக்கே ஒரு சொந்த வீடு வேண்டும்’ என்று பெற்றோர் விரும்புவது வழக்கமானதே. வயது வந்தபின், ‘சொந்த வீடு வாங்கவில்லையா?’ என்ற கேள்வி அவர்களை தொடர்ந்து பின்தொடர்கிறது. அந்த உணர்வுகளையே படம் பேசுகிறது. ஒரு நல்ல குடும்பத்தின் உறவுகளை அதன் அழகுடன் இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இந்த படம் உணர்வுப்பூர்வமான வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம் போன்றது. படத்தில் எனது ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். மீதா ரகுநாத் என் தங்கையாகவும் நடித்துள்ளார். இந்தப் படம் ஒரு குடும்பத்துடன் பயணிப்பதற்கான அனுபவத்தை தரக்கூடியதாகும். இதில் எனது கதாபாத்திர பெயர் ‘பிரபு’. பிரபுவுக்கு தனது அப்பா மீது மிகுந்த காதல் உள்ளது. அப்பாவுக்குப் பிடித்த மாதிரியான நபராக மாறி, வெற்றி பெற்று பெயர் பெற வேண்டும் என்பதே பிரபுவின் எண்ணம்.

சொந்த வீடு என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு கனவு. என் அப்பா ஒரு வீடு கட்ட எவ்வளவோ பாடுபட்டதையும், என் அம்மாவின் கனவையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன். கல்யாணத்துக்குப் பிறகு, குறிப்பாக இந்தப் படத்தில் நடிக்கத் துவங்கிய பிறகுதான் நான் சொந்த வீடு வாங்கியிருக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News