லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம், பான் இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. இதில் ஆமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திர ராவ், சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கோவையில் உள்ள அவரது பழைய கல்லூரியான PSG-க்கு சென்று புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய அவர், “2003-2006 காலத்தில் PSG-வில் பயின்றபோது, நாம் பார்த்த பெரும்பாலான படங்கள் சூர்யா சாரின் படங்களாகும்.
ஆயுத எழுத்து, பிதாமகன், மாயாவி, காக்க காக்க போன்ற படங்கள் இன்றும் நினைவில் இருக்கின்றன. சூர்யா அவர்களுடன் ஒரு நாள் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. இருவருக்கும் சரியான அமையும் போது நிச்சயமாக அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன் என்றார்.