Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

நான் இந்த படத்தோட கூட ஓய்வு பெற தயார்… நடிகை ராஷ்மிகா எமோஷனல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்தில் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட்டில் நேஷனல் கிரஷ் என்ற பெயரில் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். கடந்த வருடம், அவர் ஹிந்தியில் நடித்த ‘அனிமல்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் ஹிந்தியில் அவருக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த வருட இறுதியில் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படமும் ராஷ்மிகாவுக்கு வெற்றிப் படமாக அமைந்தது. இப்போது, அடுத்ததாக அவர் ஹிந்தியில் நடித்துள்ள வரலாற்றுப் படமான ‘ச்சாவா’ திரைப்படம் விரைவில் திரையிடப்பட உள்ளது.

விக்கி கவுசல் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ளார். சத்ரபதி சிவாஜியின் மகனான சத்ரபதி சாம்பாஜி மன்னன் பற்றிய வாழ்க்கை வரலாறு இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது. சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கவுசல் நடித்துள்ளார், அவருடைய மனைவியாக மகாராணி ஏசுபாய் என ராஷ்மிகா நடித்துள்ளார். அவுரங்கசீப் கதாபாத்திரத்தில் அக்சய் கண்ணா நடித்துள்ளார். நேற்று இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த சில நாட்களாக காலில் அடிபட்டு ஓய்வு எடுத்து வரும் ராஷ்மிகா, நடக்க முடியாத நிலையிலும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த படம் குறித்து அவர் பேசும்போது, “கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் இயக்குனர் லட்சுமணனிடம் பேசிக் கொண்டிருந்தேன். இந்த ஒரு படம் போதும்.. இதற்கு பிறகு நான் சந்தோசமாக ஓய்வு பெற்று விடுவேன் என்று சொன்னேன்.. அந்த அளவிற்கு என் வாழ்நாளில் என் விருப்பமாக கேட்கக்கூடிய ஒரு படமாக இது அமைந்துவிட்டது. படத்தின் டிரைலரை பார்க்கும்போது விக்கி கவுசல் கிட்டத்தட்ட ஒரு கடவுள் போலவே காட்சியளிக்கிறார். அவர்தான் ச்சாவா” என்று நெகிழ்வுடன் கூறியுள்ளார் ராஷ்மிகா.

- Advertisement -

Read more

Local News