பிரதீப் ரங்கநாதனின் ஜோடியாக ‘டிராகன்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கயாடு லோஹர். ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த கயாடு லோஹர் தற்போது அதர்வாவின் ஜோடியாக ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், சிம்புவின் ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்திற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். கயாடு லோஹர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். குறிப்பாக, கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களுக்கு அழைக்கப்பட்டால் உடனே வருவதற்காக சம்மதம் தெரிவிப்பதாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து கயாடு லோஹர் கூறும்போது, “எனது முதல் படத்தை வெற்றியாக்குவதில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. அதனால்தான் இளம் தலைமுறையினரின் விழாக்களில் நான் ஆர்வமாக பங்கேற்கிறேன்.
இவர்கள் புதுப்புது வார்த்தைகளுக்கு புதுப்புது அர்த்தங்களை உருவாக்குகிறார்கள். எனக்குத் தெரிந்து ‘ஷிப்’ என்றால் ‘கப்பல்’. ஆனால் இப்போது ‘ரிலேஷன்ஷிப்’, ‘சிச்சுவேஷன்ஷிப்’ என்று பல வகையான ‘ஷிப்’கள் வந்திருக்கின்றன. ஆனால் நான் எந்த ‘ஷிப்’களிலுமே இல்லை. நான் மிகவும் நல்ல பெண். எளிதாக எந்த விஷயத்திலும் சிக்கிக்கொள்ளப் போவதில்லை,” எனக் கூறினார்.