நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும், தமிழில் அவர் கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்தார். அதில் அவருக்கான காட்சிகள் இல்லை என்றாலும், இந்தியன் 3 படத்தில் அவருக்கு நிறைய காட்சிகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தெலுங்கில் வெளிவந்த கண்ணப்பா படத்தில் பார்வதி தேவியாக நடித்தார். சமீபத்தில் மாலத்தீவில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்கள் வைரலாகின.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார் என பல செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தனக்கு விபத்து எதுவும் ஏற்படவில்லை, சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என நடிகை காஜல் அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில் “நான் நலமாக இருக்கிறேன், விபத்து சம்பவம் அனைத்தும் பொய்யானது” என்று விளக்கம் அளித்துள்ளார்.