Touring Talkies
100% Cinema

Thursday, September 4, 2025

Touring Talkies

‘மதராஸி’ படத்தை பார்க்கும் ரசிகர்களின் ரியாக்ஷன்-ஐ காண ஆவலாக உள்ளேன் – நடிகர் சிவகார்த்திகேயன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‛மதராஸி’ திரைப்படம் நாளை வெளிவரவுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த, மாஸ் கமர்ஷியல் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.

இப்படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்திய நிகழ்ச்சியில் பேசுகையில், “இதுவரை நான் இத்தனை ஆக்ஷன் காட்சிகள் கொண்ட படங்களில் நடித்து இருக்கவில்லை. ஆனால் இந்த படம் வித்தியாசமாகவும், பெரும் மாஸ் அனுபவத்தையும் ரசிகர்களுக்கு தரக்கூடியதாகவும் இருக்கும். ஏ.ஆர். முருகதாஸ் மிகவும் குளிர்ந்த மனப்பான்மையுடன் இயக்கும் திறமையானவர்.

இந்த படத்தில் எந்த அரசியல் செய்தியும் இல்லை. மக்கள் என்னிடம் அமரன் மாதிரியான எதிர்பார்ப்புகளுடன் வருவார்கள் என்பது உண்மைதான். ஆனால் மதராஸி பார்த்தபிறகு அவர்களின் ரியாக்ஷனைக் காண நான் ஆவலாக காத்திருக்கிறேன். நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க விருப்பமுள்ளது. நான் காமெடி படங்களில் மட்டுமின்றி, அனைத்து வகை படங்களிலும் நடிக்க விரும்புகிறேன். யாரின் இடத்தையும் நான் பிடிக்க வரவில்லை‌. எனது இடத்தில் நான் நிற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News