நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த படம் ‘மகாராஜா’. இந்த படம் 100 கோடி வசூல் சாதனையை எட்டிய நிலையில், தற்போது சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிறகு, ஜப்பான் மொழியிலும் இப்படம் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையில், வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘விடுதலை-2’ படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் சேதுபதி தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். நேற்றைய தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் மீடியாக்களை சந்தித்த விஜய் சேதுபதியிடம், ராம்சரணின் 16வது படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. தற்போது நான் சில படங்களில் ஹீரோவாக நடிக்கிறதுடன், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறேன். எனக்கு போதுமான நேரமில்லாததால், சில படங்களை ஏற்க முடியாமல் தவிர்க்க வேண்டிய நிலை உள்ளது,” என்று தெரிவித்தார்.
மேலும், சில படங்களில் கதை சிறப்பாக இருந்தாலும், அதில் என்னுடைய கதாபாத்திரம் வலுவாக இல்லாததால், அவற்றையும் தவிர்க்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.