இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. ஆக்ஷன் மற்றும் திரில்லர் வகையில் உருவான இந்த படம், வெளியானதில் 8 ஆண்டுகளுக்கும் அதிகமான கால தாமதம் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட நிதி தொடர்பான பிரச்சனைகள் காரணமாக, இது இன்னும் திரைக்கு வராமல் உள்ளது.

இந்நிலையில், ‘வீர தீர சூரன்’ படத்தின் திரையரங்குகளுக்கான விசிட்டின் போது, ரசிகர்கள் ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்று நடிகர் விக்ரமிடம் தெரிவித்துள்ளனர். அதற்குப் பதிலாக, விக்ரம், “நானும்தான்” என கூறியுள்ளார்.
மேலும், இந்தப் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்டதற்கு, “கெளதம் மேனனிடம் கேட்டுப் பார்க்கிறேன்” எனக் கூறியதாக விக்ரம் தெரிவித்துள்ளார்.