நடிகர் ரஜினிகாந்தும் இயக்குனர் நெல்சனும் கூட்டணியில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வசூலில் பல கோடிகளை குவித்ததோடு, ரசிகர்களிடையே சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ உருவாகி வருகிறது. தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பு கோவை , கேரளா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.

‘ஜெயிலர் 2’ படத்தில் நடிகர் சிவராஜ்குமார் மீண்டும் நடிக்க இருப்பதை அவர் தானாகவே உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய சிவராஜ்குமார், “எனக்கு அமிதாப் பச்சனும் கமல்ஹாசனும் மிகவும் பிடிக்கும். குறிப்பாக கமல்ஹாசன் என்றால் அழகு. நான் பெண்ணாக இருந்திருந்தால் நிச்சயமாக அவரை திருமணம் செய்திருக்கேன். இது நான் பல மேடைகளிலும் கூறியிருக்கிறேன்.
ஒருமுறை கமல் சார் வீட்டிற்கு சென்ற போது, அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்போது கமல் சார், ‘யார் இது? என்று என் அப்பாவிடம் கேட்டார். அதற்கு என் அப்பா, ‘என் பையன் தான்’ என்று பதிலளித்தார். அப்போது நான் கமல் சாரிடம், ‘உங்களை ஒருமுறை கட்டிப் பிடிக்கலாமா?’ என்று கேட்டேன். உடனே அவர் என்னை கட்டிப் பிடித்தார். நான் கமல் சாரின் மிகப்பெரிய ரசிகன் என்று தெரிவித்துள்ளார்.