தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில், பாலிவுட்டில் வெளியாகிய ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மேலும் ஒரு புதிய வெப் தொடரில் நடித்து வருகிறார். இதுவரை நடிகையாக மட்டுமே இருந்த சமந்தா, தற்போது தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். அந்த வகையில், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்’ மூலம் ‘சுபம்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தை பிரவீன் காந்த்ரேகுலா இயக்கியுள்ளார். இப்படத்தில் புதிய முகங்கள் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ப்ரோமோஷன் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சமந்தா, தன் ஆரம்ப கட்டத்தில் நடித்த படங்களைப் பற்றி பேசினார்.
சமந்தா கூறுகையில், “எனது முதல் இரண்டு படங்களை இப்போது பார்த்தால் மிகவும் வெட்கமாக இருக்கிறது. நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்தேன் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் ‘சுபம்’ படத்தில் நடித்த இளம் நடிகர்களின் திறமையைப் பார்த்து, அவர்கள் மீது பெருமை கொள்கிறேன்,” என தெரிவித்தார்.