கருடன்’ படத்தில் நடித்த ரோஷ்னி ஹரிபிரியன் மெட்ராஸ் மேட்னி படத்தில் நாயகியாக நடித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரோஷ்னி பேசும்போது இந்த படத்தில் எந்த ஒரு இடத்திலும் மேக்கப் போடாமல் நடித்திருக்கிறேன். அப்படி இருந்தும் என்னை அழகாக காட்டி இருக்கிறார் ஒளிபதிவாளர் ஆனந்த், அவர் மூலமாகத்தான் இந்த பட வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அழகா நான் இருக்கிறேன் என்பதை இவரோடு பிரேம்ல தான் பார்த்து தெரிந்து கொண்டேன்.இயக்குனர் கதை சொன்னபோதே என் வீட்டு ஞாபகங்கள் வந்தது, படம் பார்க்கும் போது உங்கள் எல்லோருக்கும் உங்கள் வீட்டுச் சம்பவங்கள் ஞாபகம் வரும். எனக்கு வயதானால் கூட இப்படி ஒரு படம் நான் நடித்திருக்கிறேன் எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன், அந்தளவு மனதுக்கு நெருக்கமான படம் இது என்றுள்ளார்.
