விஜய் தேவரகொண்டா தற்போது தனது 13-வது படமான ‘கிங்டம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படம் ஸ்ரீ காரா ஸ்டுடியோ தயாரிக்கிறது.
இது முன்பு ‘ஜெர்ஸி’ மற்றும் ‘மல்லி ராவா’ என்ற படங்களை இயக்கிய கௌதம் தின்னனுரி இயக்கியுள்ள படமாகும், இதற்காக அவர் தேசிய விருதுகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘கிங்டம்’ படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.
இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இப்படம் மே 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான ‘ஹ்ருதயம் லோபலா’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கிருஷ்ண காந்த் வரிகளுடன் அனிருத் மற்றும் அனுமிதா நடேசன் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.