இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித் குமாரை கதாநாயகனாக கொண்டு அவர் நடிக்கும் 63-வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்துக்கு “குட் பேட் அக்லி” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் அஜித்துடன், திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றியுள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வெளியான இப்படத்தின் டீசர், தமிழ் சினிமா வரலாற்றில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்வையிடப்பட்ட டீசராக சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, “குட் பேட் அக்லி” படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ஓஜி சம்பவம்” பாடல், வரும் மார்ச் 18-ம் தேதி வெளியாக உள்ளது.இதற்கிடையில், “ஓஜி சம்பவம்” பாடல் குறித்து, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் சிறிய ஹிண்ட் கொடுத்துள்ளார், இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.