பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் படம் வரும் ஏப்ரல் 24 அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை ஹாட்ஸ்டார் நிறுவனம் சுமார் 45 கோடிக்கு ஓடிடி உரிமையை பெற்றுள்ளது. மோகன்லால் நடித்த படங்களிலேயே அதிக விலைக்கு ஓடிடியில் விலை போன படமாகவும் இது கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கேரளா வரலாற்றில் அந்த மாநிலத்தில் மட்டும் அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் இந்த படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
