சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் புஷ்பா-2. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில், வருகிற நவம்பர் 17ம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போது, படத்தின் புரமோஷன் பணிகளை மிகப் பெரிய அளவில் தொடங்கியுள்ளனர். இதற்கிடையில், புஷ்பா-2 படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 மணி நேரம் 10 நிமிடம் நீளம் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இத்தனை நேரம் இருந்தால் ரசிகர்களுக்கு சலிப்பாக இருக்கும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதையடுத்து, ரன்னிங் டைமை 2 மணி நேரம் 30 நிமிடமாக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டாலும், இப்படம் விறுவிறுப்பான கமர்சியல் கதையம்சத்துடன் உருவாகியிருப்பதால், நேரம் போவதே தெரியாமல் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று சுகுமார் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.