Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசை ரசிகர்களான ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் இருவரும் லைவ் கான்செட் நிகழ்ச்சியில் சந்தித்து கொள்கின்றனர்.

அப்போது ஏற்பட்ட நட்பு இருவருக்கும் இடையே காதலாக மாறுகிறது. அந்த காதல் படுக்கை அறையை பகிர்ந்து கொள்ளும் வரை செல்கிறது. அடிக்கடி இருவரும் ஒன்றாக இருக்கின்றனர். இதனால் கோபிகா கர்ப்பம் ஆகிறார். அந்தக் கருவை கலைக்கச் சொல்லி ரியோ ராஜ் கேட்கிறார். இதனிடையே கோபிகாவின் பிறந்த நாளன்று அவர் வீட்டுக்கு இரவு 12 மணிக்கு பால்கனி வழியாக ஏரி குதித்து சந்திக்க செல்கிறார் ரியோ ராஜ். அதே நேரம் அவருடைய பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க கோபிகாவின் குடும்பத்தினர் அனைவரும் கையில் கேக் உடன், அவரது ரூமிற்கு வருகின்றனர். அப்போது இருவரும் அரைகுறை ஆடையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பிறகு நடந்தது என்ன? கோபிகாவின் பெற்றோர் எடுத்த முடிவு என்ன? கோபிகா வயிற்றில் வளரும் குழந்தை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

டைட்டிலுக்கு ஏற்றார் போல் காதல் ததும்பும் சப்ஜெக்ட்டை இயக்குனர் ஸ்வினீத் எஸ். சுகுமார் கொடுத்துள்ளார். இன்றைய இளசுகளின் என்ன ஓட்டத்தையும், திருமணத்துக்கு முன்பு படுக்கை அறையை பகிர்ந்து கொள்ளும் சமாச்சாரத்தையும் என மாறிப்போன நமது கலாச்சாரத்தை திரையில் காட்டியுள்ளார் இயக்குனர். இருப்பினும் காதலோடு சேர்த்து குழந்தையின் அன்பையும் ஆழமாக காட்டியுள்ளார்.

லவ் சப்ஜக்டா கூப்பிடுங்க ரியோ ராஜை என்று சொல்லும் அளவுக்கு அந்த கேரக்டரில் பெர்பெக்ட் ஆக பொருந்தி உள்ளார். லவ், எமோஷன், பீலிங் என பல பரிமாணங்களில் நடிப்பை கொடுத்து அசத்தியுள்ளார். அவருக்கு இணையாக கோபிகா ரமேஷும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். இவர்களுடைய விஷயம் வீட்டில் தெரிந்தவுடன் கொஞ்சம் கூட பதட்டப்படாமல் நடந்து கொள்ளும் இடத்தில் ஸ்கோர் செய்கிறார் கோபிகா.

நண்பனாக வரும் அருணாச்சலேஸ்வரர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெஸ்ட் பிரண்ட். அதேபோல் சுரேஷ் சக்கரவர்த்தி, கவிதா, துளசி, காத்தாடி ராமமூர்த்தி என மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக தந்துள்ளனர்.பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவில் படம் கிளாசியாக உள்ளது. யுவனின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையும் பர்பெக்ட்.

- Advertisement -

Read more

Local News