சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருந்தன. இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொதுமக்களோடு கலந்தமர்ந்து செயல்பட்டதால், அவர்களை அடையாளம் காண போலீசாருக்கு கடினமாக இருந்தது. இதனை மையமாக வைத்து, இயக்குனர் எஸ். எம். பாண்டி “ராபர்” படத்தை உருவாக்கியுள்ளார்.இச்சினிமாவின் கதையில், சத்யா என்பவர் ஒரு கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து, ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். ஆனால், நகர வாழ்க்கையில் தனக்கேற்ப ஒரு சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், பெண்களிடம் செயின் பறிப்பு செய்வதற்கு முகமூடி அணிந்து கொள்ளத் தொடங்குகிறார்.
அதேபோல், டேனி என்பவர் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டே ராபரி தொழிலையும் மேற்கொண்டு வருகிறார். அவர் தனது கூட்டாளியிடம் வழிப்பறி செய்த நகைகளை மாற்றி பணம் பெற்று வருகிறார். இந்த சூழலில், டேனி, சத்யாவுக்கு உதவ இன்னொருவரை அனுப்புகிறார். இவர்கள் இருவரும் இணைந்து பல இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களை நிகழ்த்துகிறார்கள். ஒருநாள், ஒரு பெண்ணிடம் செயின் பறித்து ஓடும்போது, அவள் அவர்களை துரத்திக்கொண்டு ஓடுகிறார். அந்த நெருக்கடியான தருணத்தில், அந்த பெண் சாலையில் தவறி விழுந்து உயிரிழக்கிறார். இந்த சம்பவம், பொதுமக்களிடமும், போலீசாரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.இந்த சம்பவத்தால், அந்த பெண்ணின் தந்தையான ஜெயபிரகாஷ், தனது மகளின் மரணத்துக்குக் காரணமான நபரை கண்டுபிடித்து, தனது கைகளால் பழிவாங்க வேண்டும் என தீர்மானிக்கிறார். அவருக்கு ஸ்டில்ஸ் பாண்டியன் என்ற போலீஸ்காரர் உதவுகிறார்.
இந்நிலையில், சத்யா இவர்களிடம்சிக்குகிறார். பின்னர், ஜெயபிரகாஷ் மற்றும் ஸ்டில்ஸ் பாண்டியன் சேர்ந்து அவரை கடத்துகின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது? சத்யா எப்படிசிக்கினார்? சத்யாவுக்கும் டேனிக்கும் என்ன தொடர்பு? போலீசில் சத்யா சிக்கினாரா, இல்லையா? என்பதே மீதிக்கதை.இயக்குநர் எஸ். எம். பாண்டி, இன்று சென்னையில் நடைபெறும் செயின் பறிப்பு சம்பவங்களை அப்படியே திரையில் பதிவு செய்துள்ளார். ராபரி சம்பவங்கள் எப்படி நடைபெறுகிறது? யார் இதில் ஈடுபடுகிறார்கள்? அவர்களின் பின்னணி என்ன? என்பவற்றை மிகவும் சரியாக விவரித்திருக்கிறார்.
படத்திற்கு “மெட்ரோ” இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் எழுதிய கதை, திரைக்கதை, வசனம் கூடுதல் பலம் சேர்க்கிறது.நாயகனாக நடித்த சத்யா, இங்கு பிபிஓ வேலை மற்றும் ராபரி என இரு வாழ்க்கையை ஒரு சேர உலவுகிறார். அவர் இவ்வகையான குற்றங்களைச் செய்தாரா? என்று கேட்கும் அளவிற்கு அப்பாவித்தனமான முகப்பாங்கு அந்த கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாக அமைந்துள்ளது.அடுத்ததாக டேனி போப், தனக்கேற்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார். வழக்கமாக காமெடியில் கலக்கும் அவர், இதில் வில்லத்தனம் கலந்த நடிப்பை மிகச்சிறப்பாக அளித்துள்ளார்.சென்ராயன், ஜெய்பிரகாஷ், தீபா சங்கர், பாண்டியன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்துள்ளனர்.