Wednesday, January 15, 2025

‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

படத்தின் கதை சிறிய விவகாரமான கதையாக இருந்தாலும், அதை மிக நேர்த்தியான, உணர்ச்சி மூட்டும் காதல் கதையாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. ஒரு பெண்ணின் பார்வையில், அவளுடைய காதல் உணர்வு, திருமண உணர்வு, மற்றும் குழந்தை பெருமிதம் போன்றவை இந்தக் காலத்தின் அடிப்படையில் படமாக்கப்பட்டுள்ளன.

நித்யா மேனன் ஒரு கட்டிடக் கலை நிபுணர். ஜான் கொக்கேனை நான்கு வருடங்களாகக் காதலித்து வருகிறார். அவர் வெளிநாடு செல்லும் முன், இருவரும் ஒரு பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் முறையான திருமணம் நிகழவதற்கு முன், ஜான் மற்றொரு பெண்ணுடன் உறவில் இருப்பதை கண்ட பிறகு, அந்த திருமணத்தை நிறுத்தி விடுகிறார். குழந்தைகள் மீது அதிக ஆர்வம் கொண்ட நித்யா, ‘ஸ்பெர்ம் டோனர்’ மூலம் கருத்தரித்து ஒரு ஆண் குழந்தை பெறுகிறார். எட்டு வருடங்கள் கழித்து, ஏற்கெனவே பெங்களூருவில் சந்தித்த ரவி மோகன், நித்யா வாழும் அபார்ட்மென்ட்டின் பக்கத்து பிளாட்டில் குடியிருப்பதற்காக வருகிறார். நித்யாவின் பத்து வயது மகனும், ரவிமோகனும் நெருங்கிப் பழகுகின்றனர், இது நித்யா மற்றும் ரவி இடையேயும் நெருக்கத்தை உருவாக்குகிறது. ஆனால் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ரவி தான் நித்யாவுக்கு ‘ஸ்பெர்ம டோனர்’ ஆக இருந்தது யாருக்கும் தெரியாது. இந்நிலையில் ரவி, நித்யாவுடன் இணைந்தார்களா, இல்லையா என்பதே மீதிக் கதை.

ஒரு மெச்சூரான காதல் கதையை நீண்ட காலமாக நாம்பார்க்கவில்லை. ஒருகாலத்தில் இப்படியான சிக்கலான காதல் கதைகளை பாலசந்தர் மட்டுமே திறம்பட இயக்குவார். அந்த மாதிரியான சிக்கலான கதையை கிருத்திகா எழுதி, அதே நேரத்தில் உணர்ச்சியுடன் நெறிப்படுத்தி ஆச்சரியப்பட வைத்துள்ளார். திரைக்கதை கொஞ்சம் எல்லையை கடக்கக்கூடியதாக இருந்தாலும், அதை சீராகச் சரியாக கையாள்வதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார். இந்த சிறப்புக்கு தனி பாராட்டுக்கள். அதே சமயம், ஓரினக் காதல் மற்றும் திருமணத்தை கிளை கதையாக உள்ளிடுவது, சில பார்வையாளர்களுக்கு நெருடலை உண்டாக்கும் வாய்ப்புள்ளது.

தனி கதாநாயகனாக நடித்து தொடர்ந்து தோல்வியை சந்தித்த ரவி மோகனுக்கு இந்தப் படம் மாற்றத்தைக் கொண்டு வரும். இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு, இந்தப் படத்தில் அவரது நுட்பமான நடிப்பு மற்றும் கதாபாத்திரம் பாராட்டப்பட்டு வருகிறது. ரவியின் இந்தத் திறமையை இதற்கு முன் எந்த இயக்குநரும் முழுமையாக பயன்படுத்தவில்லை என்றே கூற வேண்டும்.

நித்யா மேனனின் நடிப்பு குறிப்பிடத்தக்கது. சமகால மாடர்ன் பெண்ணாக, மிக உணர்ச்சிவசப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காதலில் ஏமாற்றம் அடைந்ததும், அம்மாவின் வெறுப்பையும் சந்தித்ததும், தனியாக குழந்தையை வளர்த்து முன்னேறியதும், அனைத்தையும் அசாத்தியமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மகன் மீதான பாசமும், ரவிமோகன் மீதான குழப்பமான காதலும் ஒவ்வொரு காட்சியிலும் நித்யாவின் ஆளுமையை திரையில் நிறைவாக காட்டுகிறது.

- Advertisement -

Read more

Local News