Touring Talkies
100% Cinema

Friday, July 25, 2025

Touring Talkies

‘மாரீசன்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புத்திசாலி திருடனாக இருக்கும் பகத் பாசில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கச் செல்கிறார். அப்போது அந்த வீட்டில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருக்கும் வடிவேலுவை சந்திக்கிறார். அங்கு இருந்து மீட்டெடுத்த பகத் பாசிலிடம், “திருவண்ணாமலையில் இருக்கும் என் நண்பனைப் பார்ப்பதற்காக என்னை அழைத்து சென்றால், நான் பணம் தருவேன்” என வடிவேலு கூறுகிறார். அதைத்தொடர்ந்து, வடிவேலுவின் வங்கி கணக்கில் ரூ.25 லட்சம் இருப்பதை தெரிந்துகொள்ளும் பகத் பாசில், அந்த பணத்தைக் கைப்பற்றவேண்டுமென்று எண்ணி அவருடன் பயணிக்கிறார். ஆனால், வடிவேலு, பகத் பாசிலின் அடையாளங்களை பயன்படுத்தி அவர் சென்ற இடங்களில் சிலரை தேடிப்பிடித்து கொலை செய்கிறார்.

இதனுடன், வடிவேலு யார் என்பதோடு, பகத் பாசிலுடன் அவருக்குள் உள்ள தொடர்பு என்ன? இந்த கொலைகளுக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? என்பதே படத்தின் பரபரப்பான மீதி கதையை அமைக்கின்றன. ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள வடிவேலுவும், தனது பணத்தைத் திருட உத்தம மனிதராக நடிக்கும் பகத் பாசிலும் இப்படத்தில் ஒருவரை ஒருவர் ஏமாற்றும் நிகழ்வுகளின் மூலம் நேர்த்தியாகவும், ரசிக்க வைக்கும் விதமாகவும் நடித்துள்ளனர். ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவர் திட்டமிடுவது போன்ற சூழ்நிலைகள் படத்தின் முழுக்க விறுவிறுப்பைத் தருகின்றன.

இதில் கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா, லிவிங்ஸ்டன், பி.எல். தேனப்பன், கிருஷ்ணா, ஹரிதா உள்ளிட்டோரும் தங்கள் கேரக்டர்களுக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக கலைச்செல்வன் சிவாஜியின் பணிப்பு காட்சிகளும் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை உணர்வுகளை உருவாக்கும் விதமாக அமைந்துள்ளது. பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால், இசையில் இளையராஜாவின் சில பழைய பாடல்களையும் துணிவுடன் இணைத்துள்ளனர்.

இந்த படத்தின் மிகப் பெரிய பலமாக ‛கிளைமேக்ஸ்’ காட்சிவரை வெளிவராத ரகசியமே திகழ்கிறது. இருப்பினும், படத்தின் முதல் பாதியில் முக்கியமாக இருவரையே மட்டுமே மையமாகக் காட்டுவதால் சில சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதேபோல், சில காட்சிகளை முன்னதாகவே புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு முக்கியமான சமூக பிரச்சனையை புதுமையான நடைமுறையில் எளிமையாகவும் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் சொல்வதில் இயக்குனர் சுதீஷ் சங்கர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News