கம்பி கட்ன கதை – நாயகன் நட்டி நட்ராஜ் மோசடி செய்து மக்களிடமிருந்து பணம் பறித்து வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள், பல லட்சம் கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப்பற்ற முயற்சிக்கிறார். வைரம் பதுக்கப்பட்ட இடத்தில் அரசியல்வாதி ஒருவர் கோவில் கட்டியுள்ளதால், நட்டி நட்ராஜ் சாமியார் வேடமிட்டு அந்த கோவிலுக்குள் நுழைகிறார். பின்னர், கோவிலை தனது ஆசிரமமாக மாற்றி, சாமியாராகவே வாழ்ந்துகொண்டு வைரத்தைத் தேடுகிறார். இறுதியில் நட்டி நட்ராஜ் வைரம் பெறுகிறாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

நட்டி நட்ராஜ் கதாபாத்திரத்தை முழுமையாக உணர்ந்து, இயல்பாகவும் அசால்டாகவும் நடித்துள்ளார். ஏற்கனவே இப்படிப் போன்ற கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் காரணமாக, இதில் சாதாரணமான நடிப்பில் இருந்தார். படம் முழுவதும் அவர் அதிகம் .
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் முக்கேஷ் ரவி, ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக்காட்சியில் தான் தனது சிக்ஸ் பேக் உடலை வெளிப்படுத்தியுள்ளார். அதைத்தவிர வேறு எதுவும் பெரிதாக நடிப்பில் ஜொலிக்கவில்லை. நாயகிகளாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி மற்றும் ஷாலினி இருவரும் பாடல் காட்சிகளில் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
சிங்கம் புலி, கோதண்டம், முருகானந்தம், சாம்ஸ் போன்றவர் ஒதுக்கப்பட்ட வேலையைச் செய்து முடித்துள்ளனர்.இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, போலி சாமியாரின் ஆசிரமத்திலும் அங்கு நடக்கும் பல சம்பவங்களிலும் மக்களை சிரிக்க வைக்கும் விதமாக படம் அமைத்துள்ளார்.