Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

அகத்தியா திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமா ஆர்ட் டைரக்டராக இருக்கும் ஜீவா, தனது நண்பர்களான ராஷி கண்ணா, ஷாரா, இந்துஜா ஆகியோருடன் இணைந்து பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பழைய அரண்மனையை வாடகைக்கு எடுத்து, அதனை பேய் வீடாக வடிவமைக்கின்றனர். மேலும், அந்த வீட்டின் பின்புறத்தில் இருந்த பழைய காலத்து பியானோவையும் உள்ளே கொண்டு வந்து வைக்கிறார்கள்.ஒருநாள், ராஷி கண்ணா அந்த பியானோவை வாசிக்கத் தொடங்கியவுடன், அதில் மறைந்து இருந்த மர்ம அறை திறக்கத் தொடங்குகிறது. இதே நேரத்தில், ஜீவாவுக்கும் ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டு, சில மறுபடி காட்சிகள் அவரது மனதில் தோன்ற தொடங்குகிறது.

அதுமட்டுமின்றி, அந்த வீட்டில் கிடைத்த வீடியோ பிலிம் ரோலை இயக்கி பார்த்தபோது, 1940-ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் பிரெஞ்ச் ஆளுநராக இருந்த எட்வர்டின் சகோதரி மெட்டல்டாவுக்கு ஒரு அரிய வகை நோய் ஏற்பட்டிருப்பதை காண்கிறார்கள். இந்த நோயை, சித்த மருத்துவராக இருக்கும் அர்ஜுன் குணப்படுத்துகிறார். இதன் காரணமாக, மெட்டல்டா, அர்ஜுனை காதலிக்கத் தொடங்குகிறாள்.

இந்நிலையில், எழும்பு புற்று நோய்க்கு சித்த மருத்துவத்தில் மருந்து இருப்பதாக கூறி, அதற்கான ஆராய்ச்சியில் அர்ஜுன் ஈடுபடுகிறார். இந்த மருந்தை தன் வசப்படுத்த வேண்டும் என்ற ஆசையில், பிரெஞ்ச் ஆளுநர் எட்வர்ட் பல திட்டங்களை வகுக்கிறார். இதன் பிறகு நடந்தது என்ன? ஜீவாவுக்கு அந்த மர்ம உணர்வு ஏன் ஏற்பட்டது? ஜீவாவுக்கும் அர்ஜுனுக்கும் என்ன தொடர்பு? என்பதே கதைமொத்தப் பகுதி.ஹாரர், பேண்டஸி, ஹிஸ்டாரிக்கல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து மசாலாக்களும் கலந்த ஒரு காக்டெயில் விருந்தாக படம் அமைந்துள்ளது. 1940-ஆம் ஆண்டையும் 2024-ஆம் ஆண்டையும் ஒன்றாக இணைக்கும் விதத்தில், சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை திரைக்கதையில் நன்றாகச் செருத்தியிருக்கிறார்.

இன்றைய காலக்கட்டத்தில் அதிகம் பரவி வரும் அரிய நோய்களுக்கு, சித்த மருத்துவத்தில் மருந்து உண்டு என்பதையே இயக்குநர் டேக் அவே மெசேஜாக சொல்லியுள்ளார். கிளைமாக்ஸில், கேமராமேனின் உதவியுடன், புதிய யுத்த முறையில் பேண்டஸி சண்டைக் காட்சிகளை சேர்த்திருப்பது, இயக்குநரின் தொழில்நுட்ப அப்டேட்டை காட்டுகிறது.ஜீவாவின் நடிப்பு ரசிக்கும் படியாக உள்ளது. குறிப்பாக, தனது பழைய வாழ்க்கை மற்றும் தற்போதைய வாழ்க்கை இடையே உள்ள தொடர்பை தேடும் விதமான அவரது காதலாகும் முயற்சிகள், திரைக்கதைக்கு நல்ல உச்சக்கட்ட தருகிறது. ராஷி கண்ணாவுக்கு, இப்படத்தில் வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதால், அவர் ஒரு வழக்கமான கதாநாயகியாக தோன்றுகிறார்.

அர்ஜுன், இரண்டாவது கதாநாயகனாக, முழுப்படத்தையும் தனது நடிப்பால் தாங்கி நிற்கிறார். நண்பர்களாக வரும் ஷாரா, இந்துஜா, தங்கள் கேரக்டருக்கேற்றபடி நன்றாக நடித்துள்ளனர். மேலும், சார்லி, ரோகிணி, செந்தில், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர், சில முக்கியமான காட்சிகளில் வந்து செல்வார்கள். யோகி பாபு மற்றும் VTV கணேஷ் ஆகியோர், கெஸ்ட் ரோலில் வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில், பாடல்கள் நல்ல ரஸிக்க வைக்கும். குறிப்பாக, இளையராஜா இசையில் வெளியாகிய ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை ரீமிக்ஸ் செய்திருப்பது, படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சிறப்பு அனுபவமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கேற்றபடி மிரட்டலாக அமைந்துள்ளது.தீபக் குமார் ஒளிப்பதிவில், காட்சிகள் பளிச்சிடுகின்றன. குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியை ஒளிப்பதிவு செய்த விதம், தெளிவாகவும், வித்தியாசமாகவும் இருப்பது பாராட்டுக்குரியது.ஹாரர் திரைக்கதைக்குள், பாரம்பரிய சித்த மருத்துவத்தைக் கொண்டு வந்திருப்பது, இப்படத்தின் முக்கிய பலமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

Read more

Local News