Monday, November 18, 2024

‘ஆலன்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிறு வயதில் பெற்றோரையும், நெருங்கிய உறவினர்களையும் விபத்தில் இழந்தவர் வெற்றி. அந்த நினைவுகள் திரும்பத் திரும்ப வாட்டி வதைக்க காசிக்கு ஓடிவிடுகிறார். அங்கு ஹரிஷ் பெரடியை ஆன்மிக குருவாக ஏற்று அவரிடமே பயின்று வளர்கிறார். பத்து வருடங்களுக்குப் பிறகு வெற்றி அதிகம் நேசிக்கும் எழுத்தாளர் ஆகும் லட்சியத்திற்கு போகச் சொல்கிறார் ஹரிஷ். சென்னைக்குச் செல்ல ரயிலில் ஏறும் வெற்றிக்கு வெளிநாட்டுப் பெண் மதுரா அறிமுகம் கிடைக்கிறது. அந்த அறிமுகம் அப்படியே காதலாகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் போது மதுரா கொல்லப்படுகிறார். தன் லட்சியப் பயணத்திற்கு போக விருப்பப்பட்ட வெற்றி மீண்டும் ஆன்மிகப் பாதைக்கு செல்கிறார். அதற்கும் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எழுத்தாளராக ஆசைப்படுகிறார். அப்போது அவருக்கு அதில் வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

எப்போதுமே எதையோ பறி கொடுத்தவர் போலவே இருப்பவர் வெற்றி. இந்தப் படத்தில் குடும்பத்தைப் பறி கொடுத்து, காதலியைப் பறி கொடுத்து, லட்சியத்தைப் பறி கொடுத்து என பவலற்றைப் பறி கொடுப்பதால் அந்தக் கதாபாத்திரம் அவருக்கு இயல்பாகவே பரிதாபத்தை வரவழைத்து விடுகிறது.கொஞ்ச நேரமே வந்தாலும் யார் இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார் மதுரா. யார் இவர் ஏற்கெனவே ஒரு படத்தில் பார்த்த ஞாபகம் இருக்கிறதே எனத் தேடிப் பார்த்தால் கடந்த வருடம் வெளிவந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் இன்னொரு நாயகியாக நடித்தவர் என விடை கிடைத்தது. ஜெர்மனியைச் சேர்ந்த மதுரா தமிழ் சினிமாவில் தொடர்ந்தால் நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

அனு சித்தாரா என டைட்டிலில் பெயர் வந்தது. எங்கே இன்னும் காணவில்லை, எப்போது வருவார் எனக் காத்திருந்தால் கிளைமாக்சுக்கு முன்பாக வருகிறார். அவர் வந்த பிறகுதான் படத்தின் கதையில் ஒரு பிடிப்பு கிடைக்கிறது. வெற்றி, அனு சித்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் இந்தப் படத்தின் முக்கியமான உணர்வுபூர்வமான காட்சிகள். அவற்றை வடிவமைத்தது போலவும், வெற்றி – மதுரா இடையிலான காதல் காட்சிகளைப் போலவும் மொத்த படத்தையும் இயக்குனர் யோசித்து உருவாக்கி இருக்க வேண்டும்.

மற்ற கதாபாத்திரங்களில் ஆன்மிக குருவாக ஹரிஷ் பெரடி, மேன்ஷன் ஓனராக கருணாகரன், வெற்றியின் அப்பாவாக அருவி மதன் குறைந்த நேரமே வந்து போகிறார்கள்.காசி, சென்னை, மலை என அந்தந்த களங்களை தனது காமிராவில் கதையோடு சேர்த்து பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின். பல்வேறு விதமான உணர்வுகளுக்கு மாறி மாறி கொஞ்சம் உயிரூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா. சிறு வயதிலிருந்தே எழுத்தாளன் ஆகத் துடிக்கும் ஒருவனது வாழ்க்கைப் பயணம். திரைக்கதையில் மையத்தை விட்டு விலகி பல சுற்றல்களுக்குப் பின் முடிவில் மட்டும் உணர்வுபூர்வமாகத் தந்திருக்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News