Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பிசியான வேலைகளுக்கு நடுவில் எப்படி சார் இப்படியொரு அற்புதமான படம் எடுத்தீங்க… NEEK குறித்து எஸ்.ஜே.சூர்யா தனுஷிடம் ஆச்சரியமாக கேள்வி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“ராயன்” படத்திற்குப் பிறகு, தனுஷ் இயக்கியிருக்கும் அடுத்த திரைப்படம் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்”. இந்த படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்தரன், பவிஷ், ரபியா, வெங்கடேஷ் மேனன், சித்தார்த் சங்கர், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் “கோல்டன் ஸ்பாரோ”, “ஏடி”, “காதல் ஃபெயில்” போன்ற பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK) படத்தைப் பார்த்த நடிகர் எஸ்.ஜே. சூர்யா, எக்ஸ் தளத்தில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.”நமது சர்வதேச நடிகரும் இயக்குநருமான தனுஷ் உடன் NEEK திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு சிறப்பான, பொழுதுபோக்கு மிக்க, இளம் ஜென்Zயை மையமாகக் கொண்ட, வேடிக்கையுடன் எமோஷனலாக இருந்த தனித்துவமான திரைப்படம்.ஒரு கேள்வி சார் (தனுஷ்), உங்கள் நெருக்கமான வேலைகளுக்கு நடுவிலும் எப்படி இவ்வளவு சூப்பரான படத்தை எடுத்தீர்கள்? அதுவும் ‘ராயன்’ முடிந்த உடனேயே! என்ன ஒரு இயக்கம்… இப்படத்தில் நடித்துள்ள இளம் நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News